சென்னையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் முடிந்ததும் குப்பைகளை அகற்றும் போராட்டக்காரர்கள் (வீடியோ)

0
1076

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம் நிறைவடைந்தது. சட்டமன்றத்தை முற்றுகையிட உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் கலைந்து சென்றதாக இஸ்லாமிய அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. 

தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர்,  போராட்டம் முடிந்ததும், அங்கு உருவான குப்பைக் கூளங்கள் மற்றும் காலியான வாட்டர் பாட்டில்களை அகற்றி சுத்தப்படுத்தினர்.

இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது… இதுபோல தமிழக அரசியல் கட்சிகளும், போராட்டம் நடத்தும் அமைப்பினரும் கடைபிடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக போராட்டங்கள், பேரணிகள் நடைபெறும்போது, அதில் கலந்துகொள்பவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவைகளால், அந்த பகுதியே குப்பை கூளமாக மாறி அசுத்தத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

ஆனால், இன்று சிஏஏ சட்டத்துக்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய தடையை மீறி போராட்டம் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி, சேப்பாக்கம் அருகே முடிவடைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்  கலந்துகொண்ட இந்த பேரணி அமைதியாக முடிவடைந்த நிலையில், அதனால் உருவான குப்பை கூளங்களை போராட்ட அமைப்பினர் அகற்றி சுத்தம் செய்தனர்…

இதுபோன்ற செயல்களை தமிழக அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here