சென்னையில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட வயதினர் யார்?

0
513

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 118 பேரும், தடையார்பேட்டையில் 56 பேரும், திருவிக நகரில் 49 பேரும், தேனாம்பேட்டையில் 45 பேரும்,  கோடம்பாக்கத்தில் 36 பேரும்,  அண்ணாநகரில் 35 பேரும் உள்ளனர்.

மேலும், திருவொற்றியூரில் 13 பேரும், வளசரவாக்கத்தில் 13 பேரும்,  அடையாறில் 10 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 1 நபரும், மணலியில் 1 நபரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் உள்ளனர்.

இதில், சென்னையில் ஆண்கள் 64.91% பேரும், பெண்கள் 35.09% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வயது வாரியாக பார்க்கும் போது, அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 88 பேருக்கும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 80 பேருக்கும் தொற்று உள்ளது.

குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் நேற்று புதிதாக 4 நபருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 8 பேரும், 80 வயதுக்கு மேல் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 முதல் 19வயதுள்ளோர் 27பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 70 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 66 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 35 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 17 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here