சென்னையில் குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

Today's Petrol, diesel Price in Chennai( 13 Mar 2020 )

0
322

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று(வியாழக்கிழமை) சென்னையில் பெட்ரோல் விலைஒரு லிட்டர் ரூ.72.86 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர்ரூ.66.35 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.71ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.19ஆகவும் உள்ளது.இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here