சென்னையில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட 84 சாலைகள்

0
211

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் அதிகம் இருக்கும் சாலைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சீல் வைத்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் மட்டும் 84 சாலைகள் சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளுக்குள் யாரும் நுழைய முடியாது, அப்பகுதியில் உள்ளவர்களும் வெளியே வர முடியாது.

இந்த சாலைகளில் பெரும்பாலானவை ராயபுரம் (21 தெருக்கள்,) திருவிக நகர் (18 தெருக்கள்) மற்றும் வளசரவாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் தலா 10 தெருக்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பெருங்குடியில் 5 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 4 தெருக்களும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அடையாறு, மாதவரம், திருவொற்றியூர் பகுதிகளில் தலா 3 தெருக்களும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here