சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடும் உயர்வு

0
169

சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டத்தில் இருந்து வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால்
சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் சென்னையில் 12 மண்டலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று காலை நிலவரப்படி இங்கு 12,283பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகபட்சமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் தலா 1,200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவிக நகர், அடையாறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு பலியானோரில் தேனாம்பேட்டையில்தான் அதிகளவாக 422 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக திருவொற்றியூா் மண்டலத்தில் 9.6 சதவீதம் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் நோய்த்தொற்றைக் கண்டறியும் வகையில் 7 நாள்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 12 மண்டலங்களில் கொரோனா தொற்று சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக திருவொற்றியூா் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 9.6 சதவீதம் அதிரித்துள்ளது. தண்டையாா்பேட்டையில் 5.7 சதவீதமும், மாதவரத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூரில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகரில் 4.1 சதவீதமும், அம்பத்தூரில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதமும், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 2.7 சதவீதமும், அண்ணா நகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.

அதேவேளை, சோழிங்கநல்லூா் மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் 1.1 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், பெருங்குடியில் 0.5 சதவீதமும் கொரோனா  தொற்று குறைந்துள்ளது.

சென்னையில் கடந்தவாரத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும்அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி, கடந்த 7 நாள்களில் மட்டும் 9,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here