தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசக்கூடும் என்று இதுகுறித்து செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

8 ஆம் தேதி அன்று, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை பகல்நேர வெப்பம் குறைய வாய்ப்புள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here