சென்னையில் இன்று(மே 23)ஒரே நாளில் 625 பேருக்கு கொரோனா

Covid-19 status update in Tamilnadu.

0
83

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இன்று(சனிக்கிழமை) மேலும் 759 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது.

இன்று மாலை நிலவரப்படி இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று(வெள்ளிக்கிழமை) 14,753ல் இருந்து இன்று 15,512 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 24 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து திரும்பிய 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் மொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 7,915 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்தததை அடுத்து கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98ல் இருந்து 103 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கொரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here