சென்னையில் இன்று(மே 1) ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு

0
196


தமிழகத்தில் கோரோனா வைரஸ் தொற்று புதிதாக 203 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு  2,526 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 1,084 ஆக உயர்ந்துள்ளது.

  • திருவல்லிக்கேணியில் இரு தெருக்களில் 3 மற்றும் 7 வயது சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
  • தட்டாங்குளம் பகுதியில்  ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் வாயிலாக 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • சின்மயா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட ஏழு பேருக்கும், கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here