சென்னையில் இன்று(நவ.17) தங்கம் விலை நிலவரம்

Gold Price in Chennai (17th November 2020).

0
104

சென்னையில் இன்று தங்கம் விலை 160 ரூபாய் குறைந்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

இன்று(செவ்வாய்க்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4801 -க்கு விற்பனையாகிறது.

நேற்று(திங்கள்கிழமை) இதன் விலை 4,821 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 38,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.160  குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 41448 ரூபாய்க்குவிற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,976 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,772 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,771 ஆகவும், கேரளாவில் ரூ.4,690 ஆகவும், டெல்லியில் ரூ.4,976 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,909 ஆகவும், ஒசூரில் ரூ.4,826 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,829 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.68.40லிருந்து இன்று ரூ.68.10 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here