சென்னையில் இன்று(ஜூன் 27) ஒரே நாளில் புதிதாக 1,939 பேருக்கு கொரோனா

Tamil Nadu reported 3,713 fresh COVID19 cases and 68 deaths today, taking total number of cases to 78,335 and death toll to 1,025.

0
199

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழகத்தில் புதிதாக 3,713 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டவர்கள் 3,624 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 89 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும் புதிய உச்சமாக 68 பேர் (தனியார் மருத்துவமனை – 23, அரசு மருத்துவமனை – 45) பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேர் வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் பலியாகியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,737 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 44,094 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 33,213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை34,805. இதுவரை மொத்தம் 10,77,454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here