சென்னையில் இன்று(ஜன.09) தங்கத்தின் விலை

0
104

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.38 ஆயிரத்தையும், கடந்த புதன்கிழமை அன்றுரூ.39 ஆயிரத்தையும் தாண்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.640 வரை குறைந்தது.

இதன்தொடா்ச்சியாக, மூன்றாவது நாளாக சனிக்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.54 குறைந்து, ரூ.4,700ஆகவிற்கப்படுகிறது. 

வெள்ளி விலையும் இன்று மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.73.10க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதன் விலை ரூ.69 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,983 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,751 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,751 ஆகவும், கேரளாவில் ரூ.4,757 ஆகவும், டெல்லியில் ரூ.4,966 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.5,020 ஆகவும், ஒசூரில் ரூ.4,795 ஆகவும், பாண்டிச்சேரியில்ரூ.4,799 ஆகவும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here