சென்னையில் இன்று(சனிக்கிழமை) தங்கம் நிலவரம்

Gold Price in Chennai (21st November 2020).

0
75

சென்னையில் இன்று(சனிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இதன் விலை ₹4740 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹20 உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி  ₹37,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ₹ 160உயர்ந்து ₹38,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ₹ 4760 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 66.80விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.10குறைந்து ₹ 66.70விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த திங்கள் அன்று உயந்தது. அதனை தொடர்ந்து மூன்று நாட்களாக‌ தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக வீழ்ச்சியில் இருந்த தங்கம் விலை இன்று இரண்டாவது நாளாக‌ உயர்ந்து சவரன்  ₹38,080-க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here