சென்னையில் இன்று(ஆகஸ்ட் 05) ஒரே நாளில் கொரோனாவுக்கு 25 பேர் பலி

5,175 new #COVID19 and 112 deaths have been reported in Tamil Nadu today.

0
108

தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் புதிதாக 5,175பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 5,135 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 40 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 1,044 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சென்னையில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,044 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று 6,031 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,184 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here