சென்னையில் தீபாவளி பட்டாசுகளால் கரும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

பொதுவாக தீபாவளி அன்றும் அதன் பின்பான நாட்களிலும் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். மோசமான வெடிகளை வெடிப்பதாலும், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதாலும் காற்று மாசு அதிகரிக்கும்.

முக்கியமாக பெரு நகரங்களில் காற்று மாசு பொதுவாக மோசமான நிலையை அடைவது வழக்கம். பெருநகரங்களில் அதிக அளவில் மக்கள் வசிப்பதால் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம்.

அந்த வகையில் சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி பட்டாசுகளால் கரும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து இரவு முழுக்க வெடி வெடிக்கப்பட்டதால் புகை மண்டலம் ஏற்பட்டு மோசமான நிலையை அடைந்துள்ளது.

சென்னையில் காற்று மாசு 89 ppb புள்ளிகளாக இருந்தது. இந்த நிலையில் நேற்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு பல இடங்களில் 105 ppb புள்ளிகளை தொட்டது. வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அளவு 108 ppb புள்ளிகளை நேற்று இரவு தொட்டது. சென்னையில் நேற்று இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

அதே சமயம் சரவெடி பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அதையும் மீறி சென்னையில் நேற்று இரவு முழுக்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. பல இடங்களில் சரவெடி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் மோசமானது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

காற்று மாசு காரணமாக சென்னையில் முதியவர்கள், குழந்தைகள் பலர் சுவாசிக்க கஷ்டப்பட்டனர். சாலை முழுக்க கரும் புகை சூழ்ந்ததால், இரவிலும், அதிகாலையிலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் நேற்று இரவு பனியும் சேர்ந்து கொண்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here