சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்வு

The price of platform ticket being sold at Puratchi Thalaivar Dr MGR Chennai Central will be increased from ₹10 to ₹15 for a period of three months - from April 1, 2020 to June 30, 2020.

0
187

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கோடை விடுமுறை நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமேடைக் கட்டணம் 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு ரயில்வே போர்டு அனுமதியளித்துள்ளது.

இதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கோடைக்காலத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 3 மாதத்திற்கு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனிடையே நடைமேடை கட்டண உயர்வுக்கு ரயில்வே பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here