இதுவரை நடித்த வேடங்களில் தனக்கு மிகவும் பிடித்தது மாரி கதாபாத்திரமே என்று தனுஷ் பலமுறை கூறியுள்ளார். மாரி கதாபாத்திரம் முற்றிலும் தனது நிஜ கேரக்டரிலிருந்து மாறுபட்டது, அதனால் என்ஜாய் செய்து நடித்தேன் என்று முன்பு கூறினார். அதனாலேயே மாரி 2 படத்தை எடுக்க ஆவலாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அதனை நேற்று தனுஷ் நிறைவு செய்தார்.

மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகனே மாரி 2 படத்தையும் இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நாயகி. அனிருத்துக்கு பதில் யுவன் சங்கர் ராஜா இசை. முதல் பாகத்தில் உள்ள ரோபோ சங்கர் இரண்டாவதிலும் இருக்கிறார். வில்லனாக டொவினோ தாமஸ். கழுகு கிருஷ்ணாவும் உண்டு.

மாரியில் தனுஷ் பேசும், செஞ்சிடுவேன் வசனத்தை ரசிகர்கள் கேலி செய்தாலும், தனுஷுக்கு பிடித்தமான டயலாக் அது. மாரி 2 படத்தை எடுப்பேன் என்று சொன்னது போலவே எடுத்திருக்கிறார். அதாவது நேற்றோடு மாரி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் தனுஷ், செஞ்சிடுவேன் நன்றி என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.

#Dhanush, #Mari, #KajalAgarwal

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்