செக் குடியரசு செல்லும் விஜய் சேதுபதி

0
238
Vijay Sethupathi

கோகுல் இயக்கத்தில் நடிக்கும் ஜுங்கா படத்துக்காக செக் குடியரசு செல்கிறார் விஜய் சேதுபதி.

ரௌத்ரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுலின் ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அவர் தற்போது நடிக்கிற அரைடஜன் படங்களில் இதுவும் ஒன்று. பிரான்சில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

இதன் படப்பிடிப்புக்காக இந்த மாதம் 23 ஆம் தேதி செக் குடியரசு செல்கிறார் விஜய் சேதுபதி. மார்ச் 10 ஆம் தேதியே படக்குழு திரும்புகிறது. ஜுங்கா ஷெட்யூல்ட் முடிந்ததும் மார்ச் 15 ஆம் தேதி முதல் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்: கிரிமினல் வழக்குகள்: டாப் 10 முதல்வர்கள் யார்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்