செக்கச் சிவந்த வானம் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை மூன்று மாதத்தில் முடித்துத் தருவதாக மணிரத்னத்துக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் சிம்பு.

மணிரத்னத்தின் புதிய படம் செக்கச் சிவந்த வானம். விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரஹ்மான் இசை, வைரமுத்து பாடல்கள்.

இந்தப் படத்தில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜுன் 1 ஆம் தேதியுடன் முடைவடைந்தன. செர்பியாவில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்தது. அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், ஜுன் 1 ஆம் தேதியுடன் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளும் நிறைவடைந்தன.

மூன்று மாதத்தில் மொத்த காட்சிகளையும் நடித்து முடிப்பேன் என்ற வாக்குறுதியை இதன் மூலம் சிம்பு நிறைவேற்றியுள்ளார். திரையுலக வேலைநிறுத்தத்தால் ஒரு மாதத்திற்கு மேல் படப்பிடிப்பு தடைபட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்