அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல செலிபிரிட்டி செஃப் ஆண்டனி போர்டைன்(Anthony Bourdain) வெள்ளிக்கிழமை (ஜூன் 08) அன்று தற்கொலை செய்து கொண்டார்.

சிஎன் என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஃபுட் & டிராவல் தொடரான பார்ட்ஸ் அன்னோன்(parts unknown) (உலகின் அறியப்படாத பகுதிகள்) மூலமாக உலகப் புகழ் பெற்றவரான போர்டைன் ஃபிரெஞ்சு ஐந்து நட்சத்திர விடுதியறையொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மறைந்த ஆண்டனி போர்டைனுக்கு வயது 61. ஃபிரான்ஸில் இருக்கும் ஸ்ட்ராஸ்பர்க் நட்சத்திர விடுதியில், தான் பங்கேற்று நடத்தி வரும் ஃபுட் & டிராவல் தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள தங்கியிருந்த சூழ்நிலையில் தான் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என சி என் என் (CNN) தொலைக்காட்சி பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

போர்டைன் பிரபலமாகத் தொடங்கியது 1999 ஆம் ஆண்டில். நியூ யார்க்கர் பத்திரிகை முதன்முறையாக போர்டைனின் உணவு தொடர்பான கட்டுரை ஒன்றை “Don’t Eat Before Reading’ எனும் தலைப்பில் தொடராக வெளியிடத் தொடங்கியது.

அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2000 மாவது ஆண்டில் “Kitchen Confidential: Adventures in the Culinary Underbelly. என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டு உலகம் முழுவதுமிருக்கும் உணவுப் ப்ரியர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. புத்தக வெளியீட்டால் இவருக்கு கிடைத்த புகழ் உள்ளூர் ஃபுட் நெட்வொர்க் மற்றும் டிராவல் தொடர்பான தொலைக்காட்சி சேனலொன்றில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார்.

2013 ல் சிஎன்என் தொலைக்காட்சியில் சேரும் முன்பு வரை போர்டைனின் வாழ்க்கை இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. சாகஸமாக நிகழ்ச்சியை நடத்திச் செல்வதிலும், புதுப்புது நண்பர்களைத் தேடிக்கொள்ளும் ஆர்வம், அருமையான சமையல் திறன், சமைப்பது மட்டுமல்ல அவற்றைப் பற்றி மணிக்கணக்கில் கேட்பவர்களுக்கு சலிக்காத வகையில் மிக அருமையாகக் விபரிக்கும் நேர்த்தி என போர்டைனின் திறமைகள் அத்தனையும் அவரது ரசிகர்களைக் கவர்ந்திழுத்தன.

அவரது சி என் என் சேனல் ஃபுட் அண்ட் டிராவல் தொடருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பரவியது இப்படித்தான். எனவே போர்டைனின் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா தவிர உலகம் முழுவதிலும் பரவலாகக் கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவு.

ஆண்ட்டனியின் மரணத்திற்காக சி என் என் சேனல் தரப்பும் தங்களது துக்கம் கலந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது. செஃப் தற்கொலை செய்து கொண்டதற்கு தீவிரமான மன உளைச்சலே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் கருத்துச் சொல்லி வருகின்றன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்