கோயம்புத்தூரின் சூளூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், இன்று காலை செய்தித் தாள் படிக்கும்போது காலமானார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 67 வயதானது. 

இன்று நடக்கும் இறுதிச் சடங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கனகராஜின் இறப்பு மூலம், தமிழக சட்டசபையில் அதிமுக-வின் பலம் 113 ஆக குறைந்துள்ளது. இது பெரும்பான்மையிலிருந்து 5 இடங்கள் குறைவாகும். தற்போது சட்டமன்றத்தில் 22 இடங்கள் காலியாக உள்ளன. 

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி, காலியாக 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள், அதிமுக அரசு நிலைக்குமா கவிழுமா என்பதைத் தீர்மானிக்கும். 

அதே நேரத்தில் மீதம் உள்ள தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here