கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஆதி நடிக்க மறுத்துள்ளார்.

சூர்யா தற்போது செல்வராகவன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்கிறார். மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோர் இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அல்லு சிரிஷின் வேடத்தில் நடிக்க முதலில் கே.வி.ஆனந்த் அணுகியது ஆதியை. அவர் நடிக்க மறுக்க, அல்லு சிரிஷை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆதியை வில்லன் வேடத்தில் நடிக்கக் கேட்டதால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், உண்மை என்ன?

ஆதி தமிழில் நாயகனாக மட்டுமே நடிக்கிறார். அதேநேரம் தெலுங்கில் அல்லு அர்ஜுனின் சரைனொடு படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது தமிழில் 3 படங்களில் நடிப்பதால் கே.வி.ஆனந்த் படத்துக்கு கால்ஷீட் தர முடியாமல் போனது என்று விளக்கம் கூறியுள்ளார் ஆதி. தவிர, கே.வி.ஆனந்த் படத்துக்காக முற்றிலும் மாற வேண்டியிருந்தது. அது பிற படங்களின் படப்பிடிப்பை பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.

செல்வராகவன் படத்தை சூர்யா முடித்ததும் கே.வி.ஆனந்த் படம் தொடங்க உள்ளது.
Silverscreen.in Copyrighted Photos

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்