சூரரைப் போற்று படத்தில் இருந்து ‘காட்டு பயலே’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#HappyBirthdаySuriya, #HBDSuriya உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்ட் செய்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் இருந்து காட்டு பயலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஷிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

காட்டு பயலே பாடலை சினேகன் எழுதியுள்ளார், தீ பாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here