சூரரைப் போற்று டிரெய்லர்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

0
161

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது. இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30 ஆம் தேதி வெளியாகாது என கூறி இருந்தார்.

ஆனால், சூரரைப் போற்றுக்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைத்ததையடுத்து, தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, படத்தின் டிரெய்லர் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here