சூரரைப்போற்று: தடையில்லா சான்று கிடைத்தது: வெளியீட்டு தேதி அறிவிப்பு?

0
162

சூர்யாவின் 38வது படமாக, இறுதிச் சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளிவருகிறது சூரரைப் போற்று. கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ்.

சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் மூலமாக 200 நாடுகளில் சூரரைப் போற்று படம் வெளியாகும் என 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. விமானம் தொடர்பான கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்துஅனுமதி வாங்கிய பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிடமுடியும். இதனால் படத்தின்வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதாக சூர்யா தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்” சூரரைப்போற்று படத்திற்கு நாங்கள் தடையில்லா சான்று பெற்றோம். புதிய ரிலீஸ் தேதி மற்றும் கூடுதல்தகவல்களுக்கு தயாராக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படம் தீபாவளிக்கு அமேசான் பிரைமில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here