நடிகை ஸ்ருதி படங்களில் நடித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. தேடி வரும் வாய்ப்பையும் அவர் ஒப்புக் கொள்வதில்லை. சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டாக உருவாகிவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திரப் படமான இதில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ருதியை அணுகியிருக்கிறார்கள். ஸ்ருதியிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. நயன்தாரா, தமன்னா என இரு நாயகிகள் இருக்கும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது என அவர் படவாய்ப்பை மறுத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால், வேறுசிலர், ஸ்ருதி இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை, அவர் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு மேல் நடிக்காமலிருக்கும் ஸ்ருதி இந்தப் படத்திலேனும் நடிப்பாரா? இன்னும் சில தினங்களில் முடிவு தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here