ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்தில் நயாகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்றை தயாரிக்கிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.சௌத்ரியின் மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் படத்தை தயாரிக்க, அவரது இளைய மகன் ஜீவா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக அருள்நிதி.

நட்பை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். அருள்நிதி ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்குகிறார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ப்hpயா பவானி சங்கர் மேயாத மான் படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். மேயாத மானுக்குப் பிறகு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். இப்போது அருள்நிதி ஜோடியாகியிருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்