சுஷாந்த் மரணத்தில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை : ஆதித்ய தாக்கரே

Aaditya Thackeray, son of Maharashtra Chief Minister Uddhav Thackeray, had clarified on Tuesday that he was nowhere related to actor Sushant Singh Rajput's death, and that he and his family are being targeted for no reason.

0
142

பாலிவுட் திரையுலகில் வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 
இந்த நிலையில், மும்பையில் வசித்து வந்த சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமா தொழில்போட்டி காரணமாக இந்த தற்கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சுஷாந்த்சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை அளித்த புகாரின்அடிப்படையில் தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பீகார் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையினர்கள் இடையே வழக்கை விசாரிப்பது யார்? என்பதில் மோதல் நிலவி வருகிறது.

இந்தநிலையில் வழக்கு விசாரணையில், மகராஷ்டிரா முட்டுக்கட்டை போடுவதாக பீகார் அரசு குற்றம்சாட்டியதுடன், வழக்கை அதிரடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

மகராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், பா.ஜனதா எம்.பி.யுமான நாராயண் ரானே, சுஷாந்த் சிங்கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல் அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கு இந்த வழக்கில்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் தன்மீதான குற்சாட்டை மறுத்து பேசிய அமைச்சர் ஆதித்ய தாக்கரே, இந்தி திரையுலகம் மும்பையின் ஒரு அங்கமாகும். இது ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாக விளங்குகிறது. சினிமா தொழில் துறையை சேர்ந்த சிலருடன் எனக்கு தனிப்பட்ட உறவுகள் உள்ளன. இது எந்த வகையிலும் குற்றம் இல்லை.

இதை வைத்து என்மீது பழிபோட முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது.

நான் பால்தாக்கரேயின் பேரன். தாக்கரே குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

என் மீது பழிபோடுவது மிகவும் மலிவான மற்றும் அழுக்கு அரசியல். எங்களின் அரசியல் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களில் வயிற்றெரிச்சலும், விரக்தியும்தான் தற்போது குற்றச்சாட்டாக மாறியுள்ளது.

ஒருவரின் மரணத்தில் இருந்து அரசியல் செய்வது மனிதாபிமானத்திற்கு எதிரானது. இந்த வழக்கில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை.

இந்த குற்றச்சாட்டை வைத்து என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பலாம் என்ற மாயையில் யாரும் இருக்கவேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சுஷாந்த் சிங் மேலாளராக பணியாற்றி வந்த திஷா செலியன் கடந்த ஜூன் 8 ஆம் தேதி, மும்பை மலாடில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பா.ஜனதா தலைவர் நாராயண் ரானே குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் மும்பை காவல்துறை திஷா செலியன் தற்கொலை குறித்து ஏதேனும் தகவல்களோ, ஆதாரங்களோ இருந்தால் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் திஷா செலியன் தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் உலவி வருவது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here