காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியைவிடக் கூடுதல் உயிர்ச் சத்துப் பயனும் (micro nutrients) உள்ளது. அத்துடன் மூளைக்கு அவசியமான choline சத்தில் தொடங்கி, விட்டமின் பி1, பி12 என அத்தனை சத்துகளும் இதில் அடங்கியிருக்கிறது.

இப்போது சுவையான காடை வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

காடை – 4,

எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன்,

இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்,

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்,

கரம்மசாலாத்தூள் – 2 ஸ்பூன்,

தயிர் – 2 ஸ்பூன்,

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்,

எண்ணெய் – பொரிக்க,

உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த காடையை போட்டு அதனுடன் எலுமிச்சைசாறு, இஞ்சி, பூண்டுவிழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும். சுவையான காடை வறுவல் தயார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here