மட்டன் லிவரில் டிக்கா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

மட்டன்ஈரல் – 200கிராம்,
வெங்காயம் – 2,
பூண்டு – 6 பல்,
தக்காளி – 2
இஞ்சி – 20 கிராம்,
பச்சைமிளகாய் – 1,
குடைமிளகாய் – 1,
சோம்பு – ¼ டீஸ்பூன்,
மிளகு – 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்,
தனியாத்தூள் – ½ டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்,
எலுமிச்சைசாறு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையானஅளவு,
எண்ணெய் – தேவையானஅளவு.
டூத்பிக் (Tooth pick) – தேவைப்படும் எண்ணிக்கையில்.

செய்முறை :

liver

மட்டன் ஈரலில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

தக்காளி (விதையை எடுத்து விட்டு), குடை மிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கழுவிய மட்டன் ஈரலில் சிறிது தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும்.

1 வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி வைத்துக் கொண்டு, அதில் வேக வைத்து மட்டன் ஈரலை சேர்த்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். நன்றாக வதங்கியவுடன் இறக்கி விடவும்.

தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சதுர வடிவில் கட் செய்த தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து இரண்டு பக்கமும் லேசாக வேக விடவும்.

டூத்பிக் குச்சியில் ஒரு தக்காளி துண்டு, லிவர், வெங்காயத்துண்டு, குடை மிளகாய் துண்டு என்ற முறையில் சொருகி வைத்து பரிமாறவும்.
201804301155079522_Mutton-Liver-Tikka_SECVPF
சூப்பரான மட்டன் லிவர் டிக்கா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here