சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் குடைமிளகாய் பொரியல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காளான் குடைமிளகாய் பொரியல்தேவையான பொருட்கள்:

காளான் – 250 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
குடைமிளகாய் – 1
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

காளான் குடைமிளகாய் பொரியல்

செய்முறை:

வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடைமிளகாய், காளாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும் அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்தது தண்ணீர் வற்றியதும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான காளான் குடைமிளகாய் பொரியல் ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here