சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்திருந்த பணம் 2016இல் 45 சதவீதம் சரிந்து ரூ. 4.500 கோடியாக குறைந்திருந்தது . 1987இல் சுவிஸ் வங்கி தனது ரகசிய காப்பு விதிகளைத் தளர்த்திய பின் ஏற்பட்ட சரிவுக்கு பின்னர் 2016இல் தான் இதுபோன்ற ஒரு சரிவு நிகழ்ந்தது. ஆனால், சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் வங்கியில் நேரடியாக வைக்கப்பட்டுள்ள தொகை ரூ. 6.891 கோடி என்றும் மறைமுகமாக ரூ. 112 கோடி உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிப்போம் என்று பாஜகவும் மோடியும் கொடுத்த வாக்குறுதி தற்போது அவர்களையே அச்சுறுத்துகிறது. சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி 2017இல் இந்தியர்கள் வைத்திருந்த பணம் 50 சதவீதம் உயர்ந்து ரூ. 7,000 கோடியை தொட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது கறுப்பு பணம் தான் என பாஜக செய்துவந்த பிரச்சாரம் தற்போது அவர்களுக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. சுவிஸ் வங்கியில் வெளிநாட்டவர்கள் வைத்துள்ள பணம் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.100 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில் இந்தியாவின் கதை மட்டும் வித்தியாசமாக உள்ளது. இத்தகவலை வைத்துக்கொண்டு எதிர்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கினர்.

காங்கிரஸ் தலைவர் டிவிட்டர் மூலம் இதனை பற்றவைத்தார்.

மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சரிவில் இருந்த நிலை தற்போது மாறியுள்ளது தான் தற்போதைய அரசாங்கத்திற்கு வேட்டாக அமைந்துள்ளது. 2016இல் சுவஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருந்த பணம் 45 சதவீதம் சரிந்து ரூ. 4,500 கோடி என இருந்தது. 1987இல் சுவிஸ் வங்கி தனது ரகசிய காப்பு
விதிகளைத் தளர்த்திய பின் ஏற்பட்ட சரிவுக்கு பின்னர் 2016இல் தான் இதுபோன்ற ஒரு சரிவு நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி நேரடியாக சேமிக்கப்பட்ட பணம் 999 மில்லியன் சுவிஸ் ஃபிராங்குகள் (ரூ. 6,891 கோடி) மற்றும் மறைமுகமாக சேமிக்கப்பட்டுள்ள பணம் 16.2 சுவிஸ் ஃபிராங்குகள் (ரூ. 112 கோடி) என உள்ளது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல் அரசாங்கத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது. கறுப்பு பணம் வைத்திருப்போரின் விவரங்களை அறிய சுவிஸ் வங்கியுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு ”கறுப்பு பணத்தை ஒழிக்கப்போகிறோம்” என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தது மோடி
அரசு.

பியுஷ் கோயல் கொடுத்த விளக்கம்

இத்தகவலுக்கு அரசு தரப்பில் பொறுப்பு நிதி அமைச்சராக இருக்கும் பியுஷ் கோயல் முதலில் விளக்கம் கொடுத்தார். ” இந்தியாவை விட்டு வெளியே அனுப்ப சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தொகை 1.5 கோடி தான். இந்த உயர்வு எதிர்பாராதது. இந்தியாவோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் வழியே சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் வைக்கத்திருக்கும் பணம் குறித்த
முழு தகவல்களும் இந்த நிதியாண்டின் இறுதியில் கிடைக்கும். அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் இருப்பதாக தெரியவந்தால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். ஜனவரி 2018 முதல் வரி தொடர்பான பரிமாற்றங்களை வெளியிட இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் ஒப்பந்தம் கையெத்திட்டுள்ளன,” என்றார்.

ஆனால் எதிர்கட்சிகளுக்கோ பேரானந்தமாகிவிட்டது. “சிறப்பு! #பணமதிப்பிழப்பு? சுவிஸ் வங்கிக்கு பணம் பறக்கிறது. இந்தியா தோற்கிறது” என டிவிட்டரில் பதிவிட்டார் மம்தா பானர்ஜி.

அருண் ஜெய்ட்லி கொடுத்த விளக்கம் – இந்தியர்கள் வைத்துள்ள பணம் அதிகரித்துள்ளதாக வந்த செய்தி தவறானது

விமர்சனங்கள் அதிகரிக்கவே “அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள்” என ஃபேஸ்புக்கில் எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் கொடுத்தார் அருண் ஜெய்ட்லி. சுவிஸ் தேசிய வங்கியில் இருக்கும் ரூ. 7000 கோடி பணமும் கறுப்பு பணம் அல்ல என்றார். “முறைகேடாக பணம் வைத்துள்ள அனைவரும், இன்னும் சில மாதங்களில் தங்களது பெயர் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு
இந்தியாவின் கடுமையான கறுப்புப் பண சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படுவோம் என்பதை அறிவார்கள்,” என்றார். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் அதிகரித்துள்ளதாக வந்த செய்தி தவறானது என்றும் உண்மையான தகவல் ஜனவரி 2019 முதல் கிடைக்கும் என்றும் கூறினார்.

உண்மை என்ன?

சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியில் இருந்து எப்படியாவது அந்த ரூ. 7000 கோடி தொடர்பான தகவலைப் பெற அரசாங்கம் முயற்சித்து வருகிறது. வரித்துறை இத்தகவலை சரிபார்க்கும் பணியைச் செய்தாலும் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி வரை காத்திருக்கவேண்டும். தொகை பெரிதாக தெரிந்தாலும் அதில் 15-20 சதவீதத்திற்குள்ளாகத் தான் கறுப்பு பணம் இருக்கும் என சொல்லப்படுக்கிறது.

சுதந்திரமான திட்டங்களால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் வெள்ளைப் பணம் சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை விட அதிகரிக்கும் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
”காலம் மாறிவிட்டது. இந்தியர்கள் அதிகமாக வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர். வர்த்தகங்கள் விரிவடைந்து வருவதால் இந்திய பெருநிறுவனங்கள் தற்போது வெளிநாட்டு வங்கிகளில் பணம் சேமிக்கின்றனர். இவை அனைத்துமே கறுப்பு பணம் என்று முத்திரை குத்திவிட முடியாது.”

”பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற நிலை இப்போது இல்லை. டிசம்பர் 2006ல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருந்த பணம் ரூ. 23,000 கோடியாக இருந்தது,” என்றார் மூத்த அமைச்சர் ஒருவர்.

சுவிட்சர்லாந்த் வங்கிகளில் கடன் வைத்திருப்போராக சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டிருக்கும் பட்டியலில் இந்தியர்களின் பெயரோ அல்லது வேறு நாட்டவருடைய பெயரோ இடம்பெறாதது அரசாங்கத்துடைய மற்றொரு கவலையாக உள்ளது.

Courtesy : Business Today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here