சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள அனைத்து கறுப்புப் பணத்தையும் மீட்பேன் என்று உறுதியளித்தது பிரதமர் மோடி அரசு. சுவிஸ் வங்கியில் இருக்கும் ரூ7000 கோடியை கருப்பு பணம் இல்லை என்று
மாற்றிக் கூறுவது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் 50 சதவீதம் அதிகரித்து, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாகியுள்ளதாகத்
சுவிஸ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது . கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட 2017-இல் நிலைமை தலைகீழாகி 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் டெபாசிட் ஆகியுள்ளது.

சுவிஸில் உள்ள கறுப்புப்பணம் குறித்த தகவல்களை 2019-இல் பெற்று விடுவோம் என்றும் சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை ஏன் கருப்பு பணமாக கருத வேண்டும் அல்லது சட்டவிரோத பண பரிமாற்றங்கள் என்று ஏன் கருத வேண்டும் என்று தற்காலிக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டிருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்

* 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்புப்பணம் முழுவதையும் மீட்டு கொண்டுவருவேன். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி பேசியிருந்தார்.

*2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்து, உள்நாட்டில் கறுப்புப்பணத்தை கட்டுப்படுத்தப் போகிறேன் என்று கூறினார்.

*2018-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் உயர்ந்துவிட்டது . அதெல்லாம் வெள்ளை பணம் ? அப்படியென்றால் சுவிட்சர்லாந்து வங்கியில் கறுப்புப்பணம் பணம் இல்லை!

என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here