சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் 50 சதவீதம் அதிகரித்து, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாகியுள்ளதாகத்
சுவிஸ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது . இந்தியாவில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம், கருப்பு பணத்தை ஒழிபோம் என்ற அறிவிப்புகளுக்கு பின்னரும் சுவிஸ் வங்கியில் இந்தியாவிலிருந்து இவ்வளவு பணம் டெபாஸிட் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட 2017-இல் நிலைமை தலைகீழாகி 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. அதாவது 2017 இல், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது .

சுவிஸ் நேஷனல் வங்கி ஜூன் 28ஆம் தேதி வெளியிட்ட தகவலின் படி 2017-இல் மொத்தமாக அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 1.46 ட்ரில்லியன் அல்லது சுமார் 100 லட்சம் கோடி 2017-இல் மட்டும் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது .

வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று பதுக்கும் கருப்புப் பண நடவடிக்கைகளை மத்திய அரசு கடுமையாக முடக்கி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் சுவிஸ் வங்கி வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் ஆச்சரியமூட்டுகிறது .

2016-இல் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 45% சரிவு கண்டது. சுவிஸ் வங்கி வெளியிட்ட தகவலின் படி 2017-இல் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடி.

2006 ஆம் ஆண்டு இறுதியில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23,000 கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-இல் ஒரு பங்கு குறைந்தது. 2011-இல் 12 சதவீதமாகவும், 2013-இல் 43 சதவீதமாகவும் தற்போது 2017-இல் 50.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்