சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போன் சாம்சங் கேலக்ஸி A80 (SamsungGalaxy A80) – ஐ அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட் போன் மிக அதிக சேமிப்பாக256 ஜி.பி. வசதியினை உடையதாக வெளிவரவிருக்கிறது. அதேநேரம் இதில் Pop-Up மற்றும் சுழலும் வசதியினைக் கொண்ட கேமராவும் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.செல்ஃபி கேமராவை  செயற்படுத்தியதும் குறித்த கமெரா 180 டிகிரியில் எந்த திசைக்கும் சுழன்று புகைப்படம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கமெராக்கள் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல்களை கொண்டதாக இருக்கும் எனவும், 3D சென்சார்களையும் உள்ளடக்கியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர 6.7 அங்குல அளவுடைய HD+Super AMOLED திரை, பிரதான நினைவகமாக 8GB RAM என்பனவற்றினையும் இக் கைப்பேசி கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here