சுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றவர்களுக்கு சிறை

0
144
Police seized 14 bottles containing around 40 kilograms of sand.

இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப்பொருளாக எடுத்துச் சென்ற 2 சுற்றுலா பயணிகள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. 

சர்தீனிய கடற்கரைகளில் இருந்து மணல், கூழாங்கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்தீனியாவின் தெற்கு பகுதியான சியா கடற்கரையில் இருந்து 40 கிலோ மணலை திருடியதாக இரண்டு பிரெஞ்சு சுற்றுலா பயணிகள் மீது கடந்த வாரம் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இருவரும் 14 பாட்டில்களில் நிரப்பப்பட்ட மணலுடன், போர்டோ டோரசில் இருந்து படகு வழியாக பிரான்சுக்கு செல்ல முயன்றபோது பிடிப்பட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையில் விடுமுறை நினைவு பரிசாக மணலை எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும், இது சட்டவிதிமீறல் என்று தங்களுக்கு தெரியாது என்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கும் ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு, பிரிட்டனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மணல் எடுத்ததற்காக 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.