2015 யில் அமெரிக்கா சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் தான் ஹுண்டாய் நிறுவனத்தின் விதி மீறல் முதல் முறையாக வெளி கொண்டுவரப்பட்டது.

டீசல் இன்ஜின்கள் விதி மீறி இறக்குமதி செய்ததற்கு தான் இந்த அபராதம்

தென் கொரியாவின் நிறுவனமான ஹூண்டாய்க்கு 47 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் சுற்றுசூழல் விதிகளை மீறி சட்டவிரோதமாக டீசல் இன்ஜின்களை இறக்குமதி செய்து விற்றததாக ஹூண்டாய் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012 முதல் 2015 வரை ஹூண்டாய் நிறுவனம் 2,300 டீசல் கனரக கட்டுமான வாகனங்களை இறக்குமதி செய்ததாகவும் அவை அமெரிக்காவின் விதிகளை மீறியதாகவும் அமெரிக்காவின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

சூற்றுசுழல் பிரிவின் தலைவரான ஜெப்ரி கிளார்க் கூறுகையில், ‘ஹூண்டாய் தங்களது லாபத்திற்காக மக்களின் சுகாதாரத்தை கண்டுக்கொள்ளவில்லை’ என்றார்.

2015 யில் அமெரிக்கா சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் தான் ஹுண்டாய் நிறுவனத்தின் விதி மீறல் முதல் முறையாக வெளி கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு தான் இது கிரிமினல் மற்றும் சிவில் பிரிவில் விசாரிக்கப்பட்டது.

முன்னதாக அமெரிக்கா நீதிமன்றம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருந்தது. Particulate Matter மற்றும் Nitogen Oxide ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் விதிகளுக்கு ஏற்ப சான்றிதழை ஹூண்டாய் பெறவில்லை என அமெரிக்கா அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் தான் ஹூண்டாய் நிறுவனத்திற்கு 47 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.