சிவகார்த்திகேயன் நடித்து வந்த சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் நடுவில் ஏற்பட்ட தடங்கலைத் தொடர்ந்து மீண்டும் தனது ஓட்டத்தை தொடங்கயிருக்கிறது.

தனது நண்பர் டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டார். தயாரிப்பு ராஜா. சயின்ஷ் பிக்ஷன் படமான இதனை பெரும் பொருட் செலவில் தொடங்கினர். ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்த நிலையில் வேலைக்காரன் மற்றும் சீமராஜா படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தில் ராஜா கடுமையாக பாதிக்கப்பட்டார். சிவகார்த்திகேயனுக்கும் பல கோடிகளுக்கு உத்தரவாதம் தரவேண்டி வந்தது. இதனால் ரவிக்குமார் படத்தை கிடப்பில் போட்டார் சிவகார்த்திகேயன். அவருக்கும், ராஜாவுக்கும் இடையே சின்னதாக விரிசல்கூட விழுந்தது.

இந்நிலையில், பழசை மறந்து மீண்டும் ஜனவரி 20 ஆம் தேதிமுதல் ரவிக்குமார் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

ரவிக்குமார் படத்துடன் ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீனுக்காக ஒரு படம் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இது அவரது அடுத்த வெளியீடாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here