சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

0
971

சுரங்க ஊழல் வழக்கில் சாதகமான தீர்ப்பு வர உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகனிடம் 100 கோடி ரூபாய் பேரம் பேசும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது

பாஜகவில் 2010 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக இருந்த பி. ஸ்ரீராமுலு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீரஞ்சனிடம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ முற்றிலும் பொய்யானது என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் கூறியுள்ளார் . பாஜக இந்த செய்தியை பொய்யான செய்தி என்று கூறியுள்ளது . நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வந்த அந்தத் தீர்ப்பு ரெட்டி சகோதரர்களுக்கு எவ்வாறு சாதகமாக அமைந்தது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது . நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த வீடியோ பற்றி இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை .

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று 2010 ஆம் ஆண்டு எடுத்த இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி
வெளியிட்டுள்ளது . இந்த வீடியோவில் சுரங்க ஊழல் வழக்கில் சாதகமான தீர்ப்பு வர உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீரஞ்சனிடம் ஸ்ரீராமுலு பேரம் பேசுவதாக உள்ளது. ஆந்திரா கர்நாடக எல்லையில் சட்டவிரோதமாக சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டவர் ஜனார்த்தன் ரெட்டி. அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி பல கோடிகள் பேரம் பேசுவதாக உள்ளது . ஒபாலபுரம் சுரங்கம் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமானது .

தீர்ப்பு கீழகண்டவாறு அமைந்தது –

*பிப்ரவரி 2010 ஆம் ஆண்டு ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் ஓர் அமர்வு சுரங்க தொழிலுக்கு ஒப்புதல் கொடுத்தது .

*மார்ச் 2010 இல் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது .

*மே 2010 ஆம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமான தீர்ப்பு வந்த்து .

*தீர்ப்புக்கு மறுநாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தனது வேலையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .

இந்த வீடியோவில் தேதிகளை பார்த்தால் ஜனவரி மாதம் 2010 முதல் 2010 மே மாதம் வரை பல சந்திப்புகள் நிகழ்ந்தன காங்கிரஸ் கட்சி கூறுகிறது

இந்த வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி கர்நாடகத் தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிடுவதை தடை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுவும் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (சனிகிழமை ) நடைபெற இருக்கும் நிலையில், ஸ்ரீராமுலு குறித்த இந்த விடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோ தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர் ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது :

“கர்நாடகத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கக்கோரிக் கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணணனுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக தலைவர்கள் பேரம் பேசினார்கள்.

இந்த பேரத்தில் கே.பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீரஞ்சன் , ஜனார்த்தன ரெட்டியின் நண்பர்கள், கேப்டன்ரெட்டி,
சுவாமிஜி , பாஜக மூத்த தலைவர் ஸ்ரீராமுலு ஆகியோர் பேரம் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளோம்.

அந்த வீடியோவில் நீதிபதியின் மருமகன், அங்கிருந்தவர்களிடம் இன்னும் ரூ.50 கோடி வர வேண்டும் என்று கூறுகிறார். இதைப் பார்க்கும் போது நீதித்துறையின் மீது நம்பிக்கை போய்விட்டது போன்ற உணர்வு வருகிறது.

தற்போது, பதாமி தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். உடனடியாக அவரை தகுதிநீக்கம் செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடியும் பதில் அளிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர் .

இதற்கிடையே கர்நாடகத்தில் பதாமி தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
என்று கூறி இன்று (மே 10, வெள்ளிகிழமை) டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், பதாமி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்
ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அது குறித்து தேர்தல்
ஆணையம் பரிசீலிப்பதாக தெரிவித்தனர் எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here