சுரங்க ஊழலில் சிக்கி சிறைக்குச் சென்ற ஜனார்த்தனன் ரெட்டியின் சகோதரருக்கு பாரதிய ஜனதா கட்சி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இது அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தநிலையில், நேற்று (ஏப்.16) இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டது. இந்தப் பட்டியல்தான் தற்போது கர்நாடக மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெல்லாரி தொகுதியில் பாஜக சார்பில், சோமசேகர ரெட்டி போட்டியிடுகிறார். இவர், சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி, சிறை சென்ற ஜனார்த்தன் ரெட்டியின் சகோதரர் ஆவார். கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த காலத்தில், மாநில அமைச்சராக இருந்த ஜனார்த்தன் ரெட்டி, சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறைக்குச் சென்றார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்” என தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தார். அதமை இப்போது சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”எடியூரப்பாவின் அரசு ஊழல் அரசு என அமித்ஷா கூறியது தற்போது உண்மையாகியுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: மெக்கா மசூதி வெடிகுண்டு வழக்கில் அனைவரும் விடுதலை; தீர்ப்பு வழங்கிய பின்னர் பதவியை ராஜினாமா செய்த நீதிபதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்