சுமார் மூஞ்சி குமார் : இப்போ கொரோனா குமார்

director Gokul's new movie 'Corona Kumar' which is touted to be a spinoff of the blockbuster hit movie 'Idharku Thaaney Aasaipattai Balakumara'.

0
286

2013ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இயக்குனர் கோகுல் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த இந்த படத்தில் சுமார் மூஞ்சி குமார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

இந்த சூழலில் “கொரோனா குமார்” எனும் படத்தை இயக்க உள்ளதாக கோகுல் அறிவித்துள்ளார். இந்த படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் அந்த படத்தில் வந்த கேரக்டர்கள் சில இதிலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா குமார் படத்திலும் சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் கெஸ்ட் ரோல் செய்கிறாராம்.

எது எப்படியோ, விஜய் சேதுபதி ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here