சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை உயர் நீதிமன்றத்தில் மனு

0
86

பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரூ 1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர் 12 ஆம் தேதி பேனர் விழுந்து லாரி மோதி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரின் ஜாமின் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்,  தமிழக அரசிடம் ரூ 1 கோடி இழப்பீடு பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

 மேலும், சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரவும் த்ன்னுடைய மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் தமிழக அரசு உள்ளிட்ட 4 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.