சுபஶ்ரீ மரணம்; மீண்டும் தமிழக அரசை வறுத்தெடுத்த கமல்ஹாசன்

0
236


கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என்று பதிவிட்டு ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார்.

எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா?

அரசாங்கத்தின் அலட்சியத்தால் எத்தனை ரகுக்கள், எத்தனை சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  தவறைத் தட்டிக் கேட்காமல் மக்கள் இருப்பது பைத்தியக்காரத்தனம். அரைவேக்காடு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகிறதோ? என்று கமல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 

உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் எது தெரியுமா?
வாழவேண்டிய பிள்ளைகளின் மரணச் செய்தியை 

பெத்தவங்க கிட்ட சொல்றதுதான் சுபஸ்ரீயின் மரணச் செய்தியும் அப்படிப்பட்டதுதான் .

தன் பெண்ணுடைய ரத்தம் சாலையில் சிந்திக் கிடப்பதை பார்க்கும்பொழுது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல எல்லோர் மனதிலும் திகிலும் மரண வலியும் கண்டிப்பாக வரும் . பெண்ணை பெண்களை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது . இதமாதிரி சுபஸ்ரீக்கள்,  ரகுக்கள் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  ஏங்க கொஞ்சம்  அறிவு வேணாம்மா எங்க பேனர் வைக்கணும் வைக்கக் கூடாதுன்னு கூட உங்களுக்கு தெரியாதா?  இவர்களைப் போன்ற அலட்சிய வாதிகளாலும் அரைவேக்காடு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ எதிர்த்து கேள்வி கேட்டா ஏறி மிதிக்கிறது ?

தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் மிரட்டுவது தானே இவர்களுக்குத் தெரிந்த அரசியல். இதமாதிரி ஆட்கள் மீது மயிரிழை கூட எனக்கு மரியாதையும் கிடையாது .  பயமும் கிடையாது ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் மக்கள் நீதி மையம் உங்கள் சார்பாக தவறுகளைத் தட்டிக் கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும். 

எங்களை ஆள்பவர்களை நாங்களே தேர்வு செய்வோம் நாங்க காலம் முழுக்க அடிமையா இருப்போம் சொன்னா அதைவிட பைத்தியக்காரத்தனம் எதுவுமே கிடையாது  உங்களை சாதாரண மக்கள் சாதாரண மக்கள் என்று சொல்லியே அடிமையாக வைத்திருக்கிறார்கள் இந்த சாதாரண மக்கள்தான் அசாதாரணமான   தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்று நான் திண்ணமாக நம்புகிறேன் வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம் புதிய தலைமையை உருவாக்குவோம் நாளை நமதே 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here