கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை நடத்தியது. இந்த ஆய்வில் சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவிகிதம் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 10 சதவிகிதம் குறைவாகும். எதிர்காலத்தில் கூகுளை சுந்தர் பிச்சை தலைமையில் முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 18 சதவிகிதம் குறைவு என இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 சதவிகிதம் பேர் ஆதரவாக உள்ளனர்.

சுந்தர் பிச்சை தலைமைக்கு ஆதரவு அதிகமாக உள்ள போதும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்திருப்பது கூகுள் நிர்வாகத்தை கவலை அடையச் செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here