சுதா கொங்கராவின் சூரரைப் போற்று அப்டேட்

0
161

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம். சுமாராகப் போன இந்தப் படத்தைத் தொடர்ந்து சென்ற தீபாவளிக்கு என்ஜிகே வெளியாகியிருக்க வேண்டும். செல்வராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படம் கால தாமதம் காரணமாக வருகிற மே 31 வெளியாகிறது. இதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் ஆகஸ்ட் 30 வெளியாகிறது. 

இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடித்துவரும் படம்தான் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் பூஜை கடந்த 13 ஆம் தேதி சென்னையில் நடந்தது. மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இதில் நாயகியாக நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை. 

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல்ட் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் இரண்டாவது ஷெட்யூல்ட் ஆரம்பமாக உள்ளது. இறுதிச்சுற்று போல், இந்தப் படமும் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here