நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டண வசூல் மீண்டும் துவங்கியுள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவ.8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். திடீர் அறிவிப்பினால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதிலும் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு, சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது அறிவித்திருந்தது. இதனையடுத்து நள்ளிரவு முதல் மீண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சுங்கக் கட்டணத்திற்காக பலரும் 2000 ஆயிரம் ரூபாயைக் கொடுப்பதால், சில்லரைத் தட்டுப்பாட்டல் சுங்கச்சாவடி ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்