சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் 16 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதுடன், இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ரயில்வே ரோட்டில் உள்ள வீட்டில் நுழைந்து கொடூரமாக வியாபாரி குடும்பத்தை கொள்ளையர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளையர்கள் சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் 5 வடமாநில கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here