சீமான் தரப்பினர் போடும் மீம்ஸ்களால் எங்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் என்பவர், காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் தீக்காயத்தால் 80 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேள்விபட்டதும் மருத்துவமனைக்கு சென்ற வைகோ, அங்கு சிகிச்சை பெற்று வரும் சரவண சுரேஷை நேரில் பார்த்து கதறி அழுதார்.

vaiko

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட்டுக்கெதிராக போராடும் அதன்னை மிக மோசமாக சித்தரித்து, மீம்ஸ் போடுவதாகவும், இந்த மீம்ஸால் தங்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடலூர் பொதுக்கூட்டத்தில், “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன். இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேசின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும்? என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்