சீன மாணவர்கள் அமெரிக்கா வரத் தடை

The Trump administration intends to ban Chinese students from studying in the US, especially if they have ties to universities affiliated with China's Liberation Army (PLA).

0
140

ஹாங்காங் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சீன மாணவர்கள் அமெரிக்கா வரத் தடை விதித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

சீனாவின் நலனுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை திருடிவதாக அவர்கள் மீது வெள்ளை மாளிகை குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களின் நடவடிக்கையால், அமெரிக்க நலனுக்கு அச்சறுத்தல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இதனால், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இது ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் பதிலடிகளில் ஒன்றாக இருக்கும் என அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவர்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள தடை, அமெரிக்கா- சீனா உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிலேயே சீன மாணவர்கள்தாம் அதிகம் என்பதால் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிலையை மோசமாகப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சீனாவைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர். இதன் மூலம் பல்லை மற்றும் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும், 14 பில்லியன் டாலர் கட்டணமாக கிடைக்கிறது.

வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஹாங்காங் தொடர்பாக சீனா கொண்டு வந்துள்ள சட்டம், அந்த நகரத்தின் நீண்ட கால பெருமை மற்றும் தனித்துவத்தை அழிப்பது போல் உள்ளது. இது ஹாங்காங் மக்களுக்கும், சீன மக்களுக்கும், உலக மக்களுக்கும் துயரமான நாள். ஹாங்காங்கிற்கு அமெரிக்கா வழங்கி வந்த சிறப்பு சலுகைகளை வழங்கும் கொள்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்  எனக் கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here