உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி தேர்வான பிறகு, முதன்முறையாக அவரது நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு சென்றுள்ளார். முன்னதாக அவரை வரவேற்க, ராகுல் காந்தியை ராமர் போலவும் பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் போலவும் சித்தரித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

rg-1

அமேதி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சீன அரசு இரண்டு நாளில் செய்யும் வேலையை மோடி அரசுக்கு ஒரு வருடம் தேவைப்படுகிறது என விமர்சித்தார்.

மேலும் அவர், பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து பொய் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியமைந்தால் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு, உரிய விலை கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், உத்தரப் பிரதேச விவசாயிகள், உருளைக் கிழங்குகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி, அம்மாநில சட்டப்பேரவை முன்பு உருளைக் கிழங்குகளைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.