சீனா என்ற பெயரை உச்சரிக்கவே தைரியம் இல்லாத பிரதமர் – விளாசும் ராகுல் காந்தி

Rahul Gandhi said that PM Modi lacks the courage to name them. The defence ministry on its website had acknowledged a document but two days later over the political furor, the document went missing and it is based on that the Rahul Gandhi has lashed at the Modi government.

0
221

ஏன் லடாக்கில் சீன ஊடுருவல் விஷயத்தில் பிரதமர் பொய் பேசுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன ராணுவம் பாங்காங் சோ, கோக்ரா ஆகிய பகுதிகளில் எல்லை மீறி இருப்பதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை தனது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ”ஹாட் ஸ்பிரிங் பகுதியில் ரோந்து எண் 15ல் இருக்கும் குராங் நலா மற்றும் கோங்ரா, பாங்காங் சோ ஆகிய பகுதிகளில் மே 17-18 ஆகிய தேதிகளில் சீன ராணுவம் எல்லை மீறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த எல்லை மீறல் குறித்து இதுவரை சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

கடந்த மே மாதம் இதுகுறித்து பேசி இருந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”சீன ராணுவம் முன்பு இருந்த இடத்தில் இருந்து சற்று முன்னோக்கி வந்துள்ளது. இதை இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துவிட்டது என்று தவறுதலாக கருதக் கூடாது” என்று தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் பாதுகாப்புத்துறை இணையத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவம் ”மீறியுள்ளது” என்ற வார்த்தை பிரயோகப்படுத்தப்பட்டு இருப்பது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை மேற்கோள் காட்டியும், டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருந்த செய்தியை மேற்கோள் காட்டியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்விட்டரில் இதை பதிவு செய்து, ”ஏன் பிரதமர் பொய் பேசுகிறார்? என்ற கேள்விக் குறியுடன் முடித்துள்ளார். தொடர்ந்து இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவி உள்ளது. இந்திய இதை மறுப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை இணையத்தில் இதுதொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

மற்றுமொரு டிவீட்டில் இந்திய பிரதம்ர் சீனாவின் பெயரை உச்சரிக்கவே பயப்படுகிறார். சீனா ராணுவம் இந்திய பகுதிக்க்குள் நுழையவில்லை என்று சொல்வதாலும் இந்திய பகுதியில் சீனா ஊடுருவலை ஒப்புக்கொண்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை  அமைச்சக வலைத்தளத்திலிருந்து நீக்குவதாலோ உண்மையை மறைக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here